Friday, February 26, 2010

யாழ்ப்பாணம் எப்படியிருக்கிறது?

இப்பொழுது யாழ்ப்பாணம் எப்பிடியிருக்கு?’ என்று கேட்டார் புலத்திலிருக்கும் நண்பர் ஒருவர். இதற்கு உடனடியாக என்ன பதிலைச் சொல்ல முடியும்?

யாழ்ப்பாணத்திற்கு ஆயிரக்கணக்காக சுற்றுலாப் பயணிகளாக வருகின்ற சிங்களவர்களைப் பற்றிச் சொல்வதா?

அல்லது யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருக்கும் டெங்குக் காய்ச்சலைப் பற்றிச் சொல்லவா?


அல்லது யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெருகிக் கொண்டிருக்கும் வங்கிகளைப் பற்றியும் பெரும் வணிக நிறுவனங்களைப் பற்றியும் சொல்வதா?


அல்லது வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கும் அரைவாசிப் பேரைப் பற்றியோ அல்லது ‘இந்தத் தேர்தல் வந்து இன்னும் ஒரு ஆறு வருசம் எங்களை அலைக்கப் போகிறது’ என்று சொல்லிவிட்டு ‘என்னதான் நடந்தாலும் இந்தத் தமிழ்க் கட்சிகளைத் திருத்தவே முடியாது’ எனச் சலிப்போடு ஒதுங்கியிருக்கும் சனங்களைப் பற்றிச் சொல்வதா?

இல்லையென்றால், தங்கள் சொந்த ஊர்களுக்கு எப்போது போகலாம் என்ற எதிர்பார்ப்போடு போருக்குப் பின்னும் அகதிகளாகவே இருக்கிற ஆட்களைப் பற்றிச் சொல்வதா? இவர்களில் பாதிப்பேர் உயர் பாதுகாப்பு வலயம் என்ற வடமராட்சி கிழக்கு மற்றும் வலிவடக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மிகுதிப் பேர், வன்னியைச் சேர்ந்தவர்கள்.

அதுவும் இல்லையென்றால், யாரும் வரலாம் போகலாம், எதுவும் நடக்கலாம் விடலாம் என்ற மாதிரி தோட்டங்களுக்குள் நிற்கும் விவசாயிகளைப் பற்றிச் சொல்லவா? கோவில், குளம், விரதம், நோன்பு என்றிருக்கிறவர்களைப் பற்றிச் சொல்லவா? அல்லது கடல் வலயச் சட்டத்தை எப்போது முழுதாக நீக்குவார்கள்? எப்போது நிம்மதியாகக் கடலுக்குப் போகலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மீனவர்களைப் பற்றிச் சொல்லவா?

அல்லது தெருக்கள், சந்திகள் என்று எங்கும் கடை விரித்திருக்கும் நூற்றுக் கணக்கான சிங்கள வியாபாரிகளைப் பற்றிச் சொல்லவா?

அதுவுமில்லை என்றால், யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்ற பத்திரிகைகளில் சில செய்கின்ற பிரச்சாரப் போரைப் பற்றிச் சொல்வதா?

போர் முடிந்த பிறகும் தெருவழியே எதற்காகவோ இன்னும் துப்பாக்கிகளோடு போருக்கான நிலையில் காத்திருக்கின்ற படையினரைப் பற்றிச் சொல்லவா?

இதில் எதைப்பற்றிச் சொல்வது? அல்லது எதை விடுவது?


இது தகவல் யுகம். தமிழர்கள் எப்பொழுதும் உலகின் நவீனத்துவங்களோடு தங்களை அறிமுகமாக்கி வைத்திருப்பவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அதிலும் ஈழத்தமிழர்கள் இதில் இன்னும் சில படிகளில் முன்னே நிற்பவர்கள். எனவே அவர்கள் எல்லாத் தகவல்களையும் உடனுக்குடன் அறிந்திருப்பாரகள். ‘அமெரிக்காவின் செய்மதிகளை விடவும் வேகமாகவும் தகவல்களைச் சேகரிப்பதில் வல்லவர்கள் ஈழத்தமிழர்கள்’ என்று சொல்வார் ஒரு நண்பர்.


ஆகவே, ‘ஏறக்குறைய யாழ்ப்பாணத்தின் நிலவரங்கள் எல்லாவற்றைப் பற்றியும் ஓரளவுக்கு நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே இதில் என்ன புதிதாகச் சொல்ல இருக்கிறது?’ என்றேன்.


என்னதான் எதைப் பற்றி அறிந்திருந்தாலும் ஊர் நிலவரங்களைப் பற்றிப் புதிதாகவோ, வேறு கோணங்களிலோ அறிவதில் யாருக்குத்தான் ஆவலிருக்காது. நீங்கள் பார்ப்பதையும் அறிவதையும் சொல்லுங்கள் என்றார் அவர்.


யாழ்ப்பாணத்தில் இப்போது வட்டிக்கடைகள் வரவரக் கூடிக்கொண்டேயிருக்கிறது. (அதாவது வங்கிகளை இங்கே சிலர் இப்போது வட்டிக்கடைகள் என்றே சொல்கிறார்கள்). குடாநாட்டில் இப்பொழுது பன்னிரண்டு வகையான வங்கிகள் அல்லது வட்டிக்கடைகள் இயங்குகின்றன.

இந்த வங்கிகளை அறிமுகப்படுத்தும் திருவிழா இருக்கிறதே அதுதான் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது. யூனியன் வங்கி பென்னாம் பெரிய வெங்காயத்தை வைத்துக் காரியம் பார்க்கிறது. யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் வெங்காயம் ஒன்று. யாழ்ப்பாணத்து விவசாயத்தில் வெங்காயமும் புகையிலையும் முக்கியமானவை. ஆகவே அதை வைத்தே சனங்களோடு நெருக்கமாக முயற்சிக்கின்றது யூனியன் வங்கி. அந்த வங்கியின் விளம்பரங்களில் இந்த வெங்காயம் பெரிதாகக் காட்டப்படுகிறது.

இதைப்போல, பனை மரத்தை காட்சியாக்கி இன்னொரு வங்கி. நல்லூர்க் கோவிலையும் தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் படியான உடைகள், ஆபரணங்களை அணிந்தவாறிருக்கும் ஆட்களைக் காட்சியாக்கி மற்ற வங்கிகள் என தமிழர்களுக்காக, யாழ்ப்பாணத்து மக்களுக்காகவே இந்த வங்கிகள் உழைக்கப் போவதாகக் கூறித் திறக்கப்படுகின்றன.


யாழ்ப்பாண மக்கள் கடந்த இருபது இருபத்தைந்து வருடங்களும் படாத பாடெல்லாம் பட்டவர்கள். சிலகாலங்களில், உழைப்புக்கே வழியற்றிருந்தவர்கள். ஊரடங்குச் சட்டம், கடல் வலயச் சட்டம், அவசரகாலச் சட்டம் போன்றவற்றால் அவர்கள் படாத துன்பங்களையெல்லாம் அனுபவித்தவர்கள். சுற்றிவளைப்பு, படுகொலைகள் போன்றவற்றால் கலங்கியவர்கள்.


ஒரு கிலோ அரிசி வாங்குவதற்காக, ஒரு கிலோ சீனியைப் பெறுவதற்காக படாத சிரமங்களையெல்லாம் பட்டவர்கள். அதையும் விடக் காசுக்காகவே கஸ்ரப்பட்டவர்கள். அதாவது, திரவப்பணத்துக்காக எவ்வளவோ சிரமங்களைச் சந்தித்தவர்கள். உழைக்க வழியற்றிருந்தவர்கள்.



‘இதெல்லாம் முடிந்து போன கதைகள். அது போர்க்காலம். அப்போது அப்படித்தான் இருக்கும். இப்போது புதிய காலம். புதிய சூழல் பிறந்திருக்கு. பழையதை எல்லாம் இன்னும் சொல்லிக்கொண்டு இன்னும் பழைய மாதிரியே இருக்கலாமா?’ என்று இதையிட்டுச் சிலர் கேட்கக் கூடும்.



இங்கே பிரச்சினை, பழையதையெல்லாம் நினைக்க வைக்கும்படி ஏன் நிலைமை இருக்கிறது என்பதுதான். தமிழர்கள் மறக்க வேண்டியதை எல்லாம் இன்னும் நினைத்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. இது ஒரு உளவியல் சார்ந்த பிரச்சினை. மட்டுமல்ல, இது நடைமுறை சார்ந்த பிரச்சினையும் கூட.



கடந்த காலக் கசப்புகளை மறப்பதற்கு ஏற்றமாதிரி மாற்றங்கள் நடக்கவேணும். அந்த மாற்றங்கள் கடந்த காலக் கசப்புகளை நீக்கி, புதிய நம்பிக்கைகளை உருவாக்க வேணும். இது அரசியலிலும் சரி, வேறு எந்த விசயங்களிலும் சரி, நடைமுறையானால்தான் எதையும் சந்தேகிக்கிற, குற்றம்சாட்டுகிற மனப்பாங்கு விட்டுப் போகும். இதற்காக முழுக் காரியங்களையும் ஒரு நன்முகத்தோடு அரசாங்கம் செய்து நிரூபிக்க வேணும்.



போர் முடிந்த பிறகு பாதை திறக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டிருக்கிறது. சுற்றி வளைப்புகள், கொலைகள் எல்லாம் இப்போதில்லை. பொருட் தட்டுப்பாடு நீங்கியிருக்கிறது. ஆனால், இவற்றைத் தவிர ஏனைய எதிலும் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை.



இந்தச் சந்தர்ப்பத்தில் வங்கிகளைத் திறக்க அரசாங்கமும் வங்கித் தலைமைப் பீடங்களும் அவசரங் காட்டுகின்றன. ஆனால், இந்த அவசரத்தை தமிழ் மக்களின் மீள் குடியேற்றம், தமிழ்ப் பிரதேசங்களின் புனரமைப்பு, அபிவிருத்தி, உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், மீன் பிடிக்கான தடைகள், கட்டுப்பாடுகளை நீக்குதல் போன்ற அடிப்படையான விசயங்களில் காட்டவில்லை.



யாழ்ப்பாணத்தவர்கள் என்னதான் கஸ்ரங்கள், பிரச்சினைகள் இருந்தாலும் சேமிப்புப் பழக்கமுடையவர்கள். அதனால், இந்த வழக்கத்தைப் பயன்படுத்தி அவர்களுடைய காசை குறைந்த வட்டியோடு தென்பகுதிக்கு கொண்டு செல்கின்றன இந்த வங்கிகள். இது தெற்கின் அபிவிருத்திக்கு பெரும் வாய்ப்பைக் கொடுக்கிறது. தெற்கே பெரும் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது அரசாங்கம். அதற்கு யாழ்ப்பாணத்துக் காசு தாராளமாகப் பயன்படுகிறது. யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைப் பணம் புலத்திலிருந்து வருகிறது.



இந்தப் பணம் அதன் நடைமுறை அர்த்தத்தில் வடக்கை விடவும் தெற்குக்கே அதிக பயனைக் கொடுக்கிறது என்கிறார் யாழ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர். தென்னிலங்கை அதிக சிரமமில்லாமல் லாபத்தை அனுபவிக்கிறது என்கிறார் மேலும் அவர். உண்மைதான், புலத்தில் இருக்கும் தமிழர்கள் பனியிலும் குளிரிலும் தங்கள் உடலை வைத்து உழைத்து இங்கே காசை அனுப்பும் போது அதை சுகமாக தெற்கு கொண்டு போகிறது. அதற்குக் குறைந்த வீத வட்டியை மட்டும் கொடுக்கிறது.



வடக்கே பெரிய முதலீடுகளைச் செய்வதற்கு இன்னும் யாரும் தயாராகவில்லை. பொதுவாகவே முதலீடுகளைச் செய்யும் வழக்கம் ஈழத்தமிழர்களிடம் குறைவு. இப்போது புலத்திலிருக்கும் தமிழர்களிடம் முதலீட்டுப் பழக்கம் கொஞ்சம் அறிமுகமாயிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் முதலீட்டுப் பழக்கமும் அதற்கான சூழலும் இன்னும் சரியாக உருவாகவில்லை. இதை ஏற்படுத்த வேண்டியது ஒன்று அரசைச் சேர்ந்தது. அடுத்தது புலத்திலிருக்கும் மக்களுக்குரியது.



முதலீட்டுக்குரிய அளவில் பெருந்தொகைப் பணத்தை யாழ்ப்பாணத்தில் எவரும் கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கு புலம்பெயர்ந்திருக்கும் மக்கள்தான் உதவவேண்டும். அப்படி முதலீட்டுப் பழக்கம் அறிமுகமாகும்போது அதைத் தொடர்ந்து சிறு முதலீடுகள் யாழ்ப்பாண மக்களால் நம்பிக்கையோடு ஆரம்பிக்கப்படும்.



யாழ்ப்பாணத்தில் வேலையில்லாப் பிரச்சினை பெரியது. ஆயிரக் கணக்கானவர்கள் வேலையில்லாமல் சீரழிகிறார்கள், சிரமப்படுகிறார்கள். புதிய முதலீடுகளின் மூலம் இந்த மக்களுக்கான தொழில் வாய்ப்புகளை வழங்கலாம். இதுகூட ஒரு தேசியப் பணிதான். அதேவேளை இதன்மூலம் பிற சக்திகள் யாழ்ப்பாணத்தில் ஆதிக்கம் செலுத்துவதைக் கட்டுப்படுத்தவும் முடியும்.



இப்போது யாழ்ப்பாணத்தில் பல காணிகள் சிங்கள முதலாளிகளினாலும் இந்திய முதலீட்டாளர்களாலும் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றன. அவர்கள் யாழ்ப்பாணத்தின் பண்பாட்டுச் சூழலைப் பற்றியோ, புவியியல் சூழலைப் பற்றியோ கவலைப்படாதவர்கள். அதாவது இவை பாதிக்கப்படுவதைப் பற்றிய அக்கறையில்லாதவர்கள்.



இவ்வளவு காலமும் பொருளாதாரத் தடைகளாலும் அரசியல் நெருக்குவாரங்களாலும் பாதிக்கப்பட்டிருந்த இந்த மக்கள் இன்னும் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் வெளிப்படையாகவே சுரண்டப்பட்டுக் கொண்டுமிருக்கிறார்கள்.



இதேவேளை இந்த மக்களுக்கு கடனை வழங்கியும் இந்த வங்கிகள் உழைக்கின்றன. அதாவது யாழ்ப்பாண மக்களிடம் தாராளமாக இந்த வங்கிகள் சுரண்டுகின்றன. யாழ்ப்பாண மக்களில் எழுபத்தி இரண்டு வீதமானவர்கள் கடனைப் பெறுகிறார்கள் என்று ஒரு வங்கி அதிகாரி தெரிவிக்கிறார். இவர்கள் முதலீட்டுக்கான கடனைப் பெறவில்லை என்பதுதான் ஆகப் பெரிய சோகம் என்கிறார் இந்த அதிகாரி. இவர் ஒரு தமிழர் என்பதால் இப்படிக் கவலைப்படுகிறார்.



ஆகவே ஒரு பக்கத்தில் சிறு சேமிப்பாளர்களின் பணத்தை வைத்து தெற்குப் பயனடைகிறது. அத்துடன் புலம் பெயர் மக்களின் உழைப்பும் சுரண்டப்படுகிறது. மறுநிலையில், கடன் கொடுத்து யாழ்ப்பாண மக்களின் உழைப்புச் சுரண்டப்படுகிறது. இந்த வங்கிகளின் பங்காளர்களாக தெற்கின் பெரும் கைகள் இருக்கின்றன. அத்துடன் அரசாங்க வங்கிகளும் இதில் இணைந்திருக்கின்றன.



அபிவிருத்தி நடவடிக்கைகளைச் செய்வதில் காட்டுகின்ற அக்கறையை விடவும் வணிக மையங்களைத் திறப்பதிலும் வங்கிகளை இயங்க வைப்பதிலும் அரசாங்கம் காட்டுகின்ற ஆர்வம் மிகப் பாரதூரமானது, பயங்கரமானதாகும்.



எனவே ஈழத்தமிழர்களின் உழைப்பை இனியும் இப்படிப் பிறர் சுரண்டிச் செல்லாதிருக்க எல்லோரும் முயற்சிக்க வேண்டும். இதற்கான முயற்சிகள் பல விதத்திலானவை. பல முனைகளிலானவை. இதற்கும் பல சவால்களைச் சந்திக்க வேண்டும் ஈழத்தமிழர்கள். அத்துடன், நமது இயற்கைச் சூழலையும் பண்பாட்டுச் சூழலையும் பாதுகாக்கவும் நாம் முயலவேண்டும். இதுவொரு முதற்பணியே.



ஆனால், தமிழ் அரசியலும் அதன் தலைமைத்துவங்களும் இந்த மாதிரியான எவ்வளவோ அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றிய எந்தவிதமான அக்கறைகளுக்கும் அப்பாலான வெளியில்தானிருக்கின்றன.



யுத்தம் முடிந்தாலும் யுத்தத்தின் நெருக்குவாரங்களை விடவும் இந்தமாதிரி நெருக்குவாரங்கள் பயங்கரமானவை. இவை கண்ணுக்குத் தெரியாதவை. ஆனால், நீண்டகால அடிப்படையில் ஒரு சமூகத்தை முடக்கக்கூடியவை.





http://www.vannionline.com/

Thursday, February 25, 2010

பிரபாகரன் குறித்த செய்திகள்: காலம் தான் சொல்ல வேண்டும்- ருத்திரகுமாரன்

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த செய்திகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன்.

இதுகுறித்து இலங்கைத் தமிழ் இணையங்கள் வெளியிட்டுள்ள செய்தி..
பெண்ணிய உளவியல் ஆய்வாளரான பரணி கிருஷ்ணரஜனி தலைமையிலான ஐவர் குழு ருத்திரகுமாரனுடன் சிறப்பு நேர்காணலை நடத்தியது.

அப்போது, பிரபாகரனின் மரணம் குறித்த கேள்விக்கு ருத்திரகுமாரன் பதிலளிக்கையில், சில விவகாரங்களில் எது உண்மை என்பது சர்சைக்கு உள்ளாகும்போது அதற்குரிய பதிலை காலம் தான் வரலாற்றில் பதிவு செய்கிறது. பிரபாகரன் பற்றிய சர்ச்சைக்கும் இது பொருந்தும் என்று ருத்திரகுமாரன் கூறினார்.


கே.பி. என்னும் குமரன் பத்மநாதனின் வழிகாட்டலில் நாங்கள் செயல்படுவதாக சிலர் வதந்திகளை பரப்ப முயற்சி செய்கின்றனர் என்றும் எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகைய வதந்தி நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைக்கும் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் உள் நோக்கத்திலேயே செய்யப்படுகிறது என்றும் அவர் கூறியதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

Wednesday, February 24, 2010

Colombo on alert for bombers

Prime Minister Ratnasiri Wickramanayake revealed that according to intelligence reports, several LTTE suicide bombers had crossed over to Colombo following the war and their whereabouts are still unknown.
In an exclusive interview with Daily Mirror Online Prime Minister Wickramanayake said that the authorities were trying to trace these cadres and till such time they are found, the military would be on high alert.

“The matter of suicide bombers is a dangerous problem. If we cannot trace where they are then that means they are going all over. We do not know at what moment they will strike that is if they still have their weapons. Therefore we are on the alert,” the Premier said.
When questioned of a threat of an LTTE uprising, the Prime Minister added that according to the same intelligence sources, some Sri Lankans who were living overseas had been collecting funds but the reason for such a collection was still unknown.
“The same sources indicate that Sri Lankans who are living in foreign lands are getting together to collect funds. So whether these people are trying to group themselves there, I do not know,” Prime Minister Wickramanayake said.

He further said that according to intelligence reports, active LTTE cadres were still amongst the IDPs camps in the north which was one of the reasons why resettlement had been delayed. “Our intelligence indicate that LTTE cadres are still in the camps. This is why we have not been able to completely resettle the IDPs,” the Prime Minister said.

Army Commander Jagath Jayasuriya had also earlier in the month warned that the concept of Tamil Eelam had not died out against those harbouring it.

“Even at present those who had connections with terrorists and the Tamil Diaspora overseas are still discussing the possibility of establishing a state of Eelam according to information we received,” Lt Gen Jagath Jayasuriya had said.

Further stating that the Army has the responsibility to protect the country, Jayasuriya had said that a large number of troops in Northern and Eastern areas were deployed not for offensive duties but for observations or intelligence duties

Source : http://www.tamileelamonline.com/

ஒற்றைக் கனவு தமிழீழம்

(ஒற்றை கனவு தமிழீழம் கட்டுரை மணி செந்தில் எழுதியது இது வாசகர் ஒருவர் மூலம் வந்ததால் அவரும் பெயர் குறிப்பிடவில்லை ஆகவே கட்டுரையாளரின் பெயரை குறிப்பிடவில்லை தவறுக்கு சுய விமர்சனம் எற்று கொள்கிறோம்)




தொன்மையான ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக, தங்களை தம் இனத்தின் விடுதலை நிறைந்த வாழ்விற்காக, வரலாற்றின் கரங்களில் ஈகப் பக்கங்களாக அளித்து விட்டு, நம் நினைவுகளில் என்றும் சுடர் விடும் ஒளியாய் நிறைந்திருக்கும், மாவீரர்களின் நினைவினை வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அள விற்கு உலகத் தமிழர்கள் ஒரே அலைவரிசையில் திரண்டு போற்றி மகிழ்ந்தனர்.

தாயக தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. ஒரு மாபெரும் வீழ்ச்சிக்கு பின்னர், எதிர்காலம் குறித்த மாறாத நம்பிக் கையை உலகம் முழுக்க பரந்து வாழும் தமிழ் தேசிய இனத்தின் வழித் தோன்றல்கள் தங்களுக் குள் தாங்களே எழுப்பிக் கொண்டார்கள். நம் சம காலத்தில் தமிழருக்கே உரிய தொன்மையான அற ஆற்றலோடு, நம்மை எல்லாம் வழி நடத்தும் நம் தேசிய தலைவர் பிறந்த நாளை தங்கள் இனத்தின் மீட்சி நாளாக உலகத் தமிழர்கள் ஒற்றைக் குரலில் உலகுக்கு அறிவித்தனர். ஒரு பேரழிவிற்கு பின் னால் சாம்பலாய் கருகிய ஒரு இனம், விடுதலை வேட்கையும், இனமான உணர்வும் கொண்டு தனக்குள்ளே உயிரூட்டி... உருவாக்கிக் கொண்டு தங்களுக்கான விடுதலையையும், தங்களுக்கான நாட்டினையும் அடைவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் சிந்திக்கத் துவங்கி உள்ளனர் என்ப தற்கு, அறிகுறிகளாக உலகம் முழுவதும் கொண் டாடப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள் அறிவிக் கின்றன. ஒரு தொன்மையான அறம் வழி சார்ந்த ஒரு தேசிய இனத்தின் ஈடு இணையற்ற தலை வராக மேதகு பிரபாகரன் விளங்குகிறார் என்பதனை நம் எதிரிகளும், துரோகிகளும் புரிந்துக் கொண்டு விழி பிதுங்கி நிற்கின்ற நிலை மையை உலகத் தமிழர்கள் மாவீரர் தின நிகழ்வுகளால் இன்று ஏற்படுத்தி உள்ளார்கள்.

தமிழரின் நெடிய வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்க்கும் போது, ஒரு அற உணர்வு கொண்ட தேசிய இனம் தான் இது, என்று நம்மை நாமே பெருமிதம் கொள்ள நிறையக் காரணங்கள் உண்டு.


குறியீடுகளால் நிரப்பப் பட்டது தமிழரின் இலக்கியம். முல்லைக்கு தேர் அளித்த பாரி, மகனை தேர்க்காலில் இட்ட சோழன், தன் பச்சிளம் மகனையும், போர்க்களத்திற்கு அனுப்பிய தாய், காயம் பட்ட புறாவிற்காக தன் தொடையினை அறுத்த சிபி, குளிரில் வாடிய மயிலுக்கு போர்வை அளித்த பேகன் என புனைவும், குறியீடுமாய் திகழும் நம் இலக்கி யங்கள் காட்டும் குறியீடுகள் எவை என்று ஆராயும் போது வீரமும், அறமும், இரக்கமும், ஈகையும் நம் முன்னோர்களின் வாழ்வாக இருந் திருக்கின்றன. வரலாற்றில் ஒரு இனத்திற்கென இப்படிப்பட்ட அறவியல் கூறுகளை எங்கும் பார்க்க இயலாது. சங்க இலக்கியங்களில் ஒழுகும் அற உணர்வு தமிழரின் வாழ்வியலில் அறம் எத்தனை நூற்றாண்டு காலமாய் நீடித்து வந்திருக் கிறது என்பதனை உணர்த்துகிறது.

எதிரியிடம் கூட நாம் நாகரிகத்தினை, இரக்கத்தினை காட்டும் தன்மையை நம் சங்க இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன. உலகில் தன் இனத்திற்காக,மொழிக்காக தன்னைத் தானே தனிமனிதனாய் எரித்துக் கொண்டும், வெடித்துக் கொண்டும் இறந்த தமிழின இளைஞர்கள் தன் இனத்தின் அறவுணர்ச்சி மூலமாகவே உயிராற்றல் அடைந்தார்கள். தன் இனத்திற்காகவும், மொழிக் காவும் தங்களை தாங்களே அழித்துக் கொள்ள முன்வருவதுதான் தியாகத்தின் உச்சம். அந்த தியாகத்தினை மிகவும் நேர்த்தி மிகுந்த துணிவான முறையில் தமிழ் இளைஞர்கள் மனம் உவந்து செய்தார்கள். இதே அற உணர்வினால் தான், தன் கைக்கு எட்டிய தொலைவில் தன் இனம் அழிவதைக் கண்டு சகிக்காத மாவீரன் முத்துக் குமார் உள்ளிட்ட உயிர் ஈகைப் போராளிகள் தங்களைத் தாங்களே நெருப்புக்கு இரையாக்கி விதையாய் இந்த மண்ணில் வீழ்ந்ததும் நடந்தது. ஆணுக்கு சமம் பெண் என உலக நாகரிகங்களுக்கு கற்றுக் கொடுத்த நம் தமிழ் பண்பாட்டின் தொடர்ச்சியாய் நம் சகோதரிகள் பெண் புலிகளாய் களம் புகுந்ததும், தீரத்துடன் போரிட்டதும், நம் விழிகளை பெருமித கண்ணீரால் நிறைக்கும் உணர்வாகும். இதே அறம் தான் நம் வான்புலிகள் சிங்கள மக்கள் மீது குண்டு வீசாமல் படை இலக்கினை மட்டுமே தாக்கி விட்டு பறந்த போதும் இருந்தது. இதே அறம் தான் நம் தேசிய தலைவர் மீதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும் இன்றளவும் ஒரு தவறான செய்தியைக் கூட சுட்டிக்காட்ட முடியாத அளவிற்கு எதிரிகளை நிற்க வைத்திருக்கிறது.

வரலாற்றின் நெடிய பக்கங்களில் பார்க்கும் போது, வேறு எந்த இனத்தினை காட்டிலும் தன் மொழிக்காகவும், தன் இனத்திற்காகவும் கரும் புலிகளாக, மொழிப் போராட்ட தீரர்களாக திகழ்ந்து, தான்வீழ்ந்து, இனம் செழிக்க களம் புகுந்த மாவீரர்கள் உடைய ஒரே இனம் நம் தமிழினம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஈகையும், வீரமும் உடைய நம் முன்னோர்களின் வழித் தோன்றலாய் தோன்றி, உலகினை ஒற்றை இயக்கத்தின் வாயிலாக எதிர்த்த தனி மனித ஆளுமையான நம் தேசிய தலைவர் தமிழர்களின் பெருமை மிகு அடையாளம். கொடும் துயர்களுக் கும், துரோகங்களுக்கும் நடுவிலும் விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் பெருமை மிகு தலைமையும் அறம் இழக்கா உணர்வினை தக்க வைத்ததுதான் நான்காம் கட்ட ஈழப் போர் நமக்கு விட்டுச் சென்ற பாடம்.

இந்த பூமிப்பந்தெங்கும் வன்னி முகாம் களில், தமிழக வயல்களில், வளைகுடா நாடு களின் சுடும் பாலையில், மலேயா காடுகளில், அமெரிக்க, கனடா நாடுகளில், கணினி திரை களுக்கு முன்னால், என எங்கும் பரவிக் கிடக்கும் தமிழினம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக நம் தொன்மை அறத்தின் தொடர்ச்சியாய் மேதகு பிரபாகரனும், இயக்கமும் பாதுகாத்த இந்த அற உணர்வுதான் இருக்கிறது. செஞ்சோலை குழந் தைகளைக் கூட குண்டு வீசி கொல்லும் கொடிய சிங்கள ராணுவத்திற்கு எதிராக அற உணர்வுடன் தலைவர் நடத்திய மரபு வழிப் போரும், பிடிபட்ட சிங்கள ராணுவ வீரர்களை மிகவும் மதிப்புடன் நடத்திய பண்பும், நம்மை மேன் மேலும் பெருமிதத்திற்கு உள்ளாக்குகிறது. தொடர்ச்சி யான கடும் தாக்குதல்களுக்கு நடுவிலும் தன் மக்களை பாதுகாத்த உளப்பாட்டின் உறுதி நம் தேசிய தலைவரின் மதிப்பினை பன் மடங்கு உயர்த்துகின்றன.


ஒரு இனம் வீழ்வதும்.. பிறகு வீழ்ச்சியினை கடந்து மீள்வதும் உலகத்தியற்கை. தேசிய இனங்களின் தன்னுரிமைக்கான விடுதலைப் போராட்டங்கள் உலக நாடுகளில் வெவ்வேறு பகுதிகளில் தொடர்ந்து வருகின்றன. ஆனால் வேறு எந்த இனத்திற்கும் மேதகு பிரபாகரன் போல அறம் வழி நின்ற தலைவர் கிட்டவில்லை. தன் குடும்பத்திற்காக தன் இனத்தினை காட்டிக் கொடுத்த தலைவர்களை ஈழ விடுதலைப் போர் நமக்கு அடையாளம் காட்டியது. ஆனால் தன் இனத்திற்காக தன் குடும்பத்தினரையும் தலைவர் இழக்க தயாராக இருந்ததை நாம் அறிகிறோம். அதற்கு எடுத்துக்காட்டாக இன்னும் சிங்கள ராணுவத்தின் கோரக்கரங்களில் பிடிப்பட்டு தேசிய தலைவரின் பெற்றோர்கள் இருந்து வருகிறார்கள்.

தேசிய தலைவரை எந்த ஆன்ம சக்தி இப்படி நேர்மை வலிவோடு செயல்பட வைக் கிறது என்று நாம் சிந்திக்க துவங்கினால், நாம் வியப்பின் உச்சிக்கு சென்று விடுகிறோம். தமிழி னத்தின் அறவுணர்ச்சி முழுவதையும் உள்வாங் கிய ஒரு மாமனிதராய் நம் தேசிய தலைவர் இருக்கிறார். தன் வாழ்வு முழுக்க மக்களுக்கான ஒன்று என்பதனை அவர் மிகச் சரியாக உணர்ந்தி ருந்தார். சாதாரண மனிதர்களுக்கு உண்டான பலவீனங்கள் எதனையும் அவரிடம் காண முடியாமல் போவதற்கு காரணமும் அதுதான். மேதகு பிரபாகரனின் அறவுணர்ச்சிதான் கடும் சமரினால் பெற்றோரை இழந்த பெண் குழந்தை களை காப்பாற்ற செஞ்சோலை சிறுவர் இல்ல மாக உருவெடுத்தது. ஆண் குழந்தைகளுக்காக காந்தரூபன் அறிவுச் சோலையாக, போரினால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மீள் வாழ் விற்காக வெற்றிமனையாக, இன ஒடுக்கு முறை யுத்தத்தினால் கவனிப்பாரற்று கைவிடப்பட்ட முதியவர்களை காக்க மூதாளர் பேணகமாக, போரினால் தொடர்ந்த வறுமையை அழிக்க தமிழர் புனர் வாழ்வு கழகமாக, மருத்துவ பணி களுக்கு தியாகி திலீபன் மருத்துவ சேவை மையமாக என பல பரிமாணங்களில் தமிழ்த் தேசியத் தலைவரின் அறவுணர்ச்சி மிளிர்ந்தது.

எமது மன உறுதிக்கு எதிரி சவால் விடுகின்றான்.இந்த சவாலை ஏற்பதற்கு எமது ஆன்ம உறுதியை தவிர வேறு ஆயுதங்கள் தேவை இல்லையென 1991மாவீரர் தின உரையில் அவர் குறிப்பிட்டார்.

மேதகு பிரபாகரன் ஆயுதங்களை மட்டும் நம்பி போராடிய வெறும் கலகக்காரர் அல்ல . மாறாக, மன உறுதியோடு விடுதலை வாழ்விற்காக போராடிய புரட்சியாளர் அவர். சங்க இலக்கியங் களிலிருந்தும், நெடிய தமிழ் பண்பாட்டு பாரம் பரிய விதைகள் மூலமாக, இயல்பாகவே தமிழன் என்கிற முறைமையின் தலைவர் பெற்ற அறவு ணர்ச்சிதான் போர்க் களத்தில் ஆயுதங்களை விட வலிமையான மன உறுதியாக உருவெடுத்தது.


""எங்கள் இனத்தின் தேசிய தன்னுரிமையின் அடிப்படையில் நாங்கள் தேசிய விடுதலைக்காக போராடி வருகிறோம். எங்கள் மக்கள் விடுதலை யோடும், தன்னுரிமையோடும் வாழுகின்ற புனித உரிமையை பாதுகாக்கவே நாங்கள் போராடு கிறோம்''.(1984ல் அனிதா பிரதாப்பிற்கு மேதகு பிரபாகரன் அளித்த நேர்காணலில் இருந்து)

தேசிய தலைவர் தன் நோக்கத்தில் மிகத் தெளிவாக இருக்கிறார். உலகம் முழுதும் வாழுகின்ற தமிழர்களின் கரங்களில் இன்று ஈழ விடுதலைப் போர் கையளிக்கப்பட்டிருக்கிறது. கொடுங்கோலன் இட்லரால் மாண்ட யூத இனம் எப்படி தங்களுக்கான ஒரு நாட்டினை உருவாக்கி னார்களோ, அதே போல உலகத் தமிழர்கள் தங்களுக்கான தமிழீழ நாட்டினை என்ன விலை கொடுத்தேனும் அடைந்தேத் தீர வேண்டும். நாம் இந்த விடுதலைப்போரில் அளவிற்கு அதிக மாகவே விலை கொடுத்து விட்டோம்.


நாம் இழந்த உறவுகளின் நினைவு எப்போதும் நம் உள்ளத்தின் உச்சாணிக் கொம்பில் நிலை நிற்க வேண்டும். புதைக் குழிகளுக்குள் புதையுண்டு போன எண்ணற்ற தமிழர்களின் இறுதி மூச்சு இந்த காற்றில் தான் கலந்திருக்கிறது என்ற எண்ணம் நம் மனதில் என்றும் பதிவாக இருக்கவேண்டும்.

தமிழின இளைஞர்கள் மற்ற இன இளைஞர்களைக் காட்டிலும் உள்ளம் முழுக்க வீழ்ந்த வன்மத்துடன் செயல் புரிய வேண்டும். கல்வி, பொருளாதாரம், தொழில் என அனைத்துத் துறைகளிலும் இழப்புகளின் தீரா துயர் தந்த வன்மத் துடன் போராடி தமிழர்கள் முதலிடம் அடைய வேண்டும். சிறுக சிறுக பெருகி ஆர்ப்பரிக்கும் மக்கள் வெள்ளமாய் தமிழர்களுக்கான தாயகத்தினை அடைய போராடுவதற்கான மன நிலையைத் தக்க வைப்பது தான், நாம் மாவீரர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க இயலும்.

கடும் துயர் சூழ்ந்த போதும் அறம் காத்த சான்றோனாய் மேதகு பிரபாகரன் இருக்கிறார். அவர் குறித்த பெருமிதமும், தீவிர செயல்பாடுமே நம் எதிர் காலத்தினை தீர்மானிக்கும்.

12 கோடி தமிழர்களின் ஒற்றைக் கனவு தமிழீழம். அதை நாம் எந்த விலை கொடுத்தேனும் அடைந்தேத் தீருவோம். தமிழர்கள் ஒருவருக் கொருவர் சந்திக்கும் போது அடுத்தாண்டு தமிழீழத்தில் சந்திப்போம் என்று சொல்வோம். அறம் வழி நின்று உலகத்திற்கு தமிழரின் துயர் சூழ்ந்த போதும் அகலா அறத்தினையும், மாறா மறத்தினையும் உணர்த்திய மேதகு தேசிய தலைவர் நீடுழி வாழ்க என உரக்கச் சொல்வோம்.


தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்.
 
source : http://viduthalaivengaigal.blogspot.com

Tuesday, February 23, 2010

வலிமை கொண்ட தோளினாய் போ போ போ

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதுபற்றிய ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் எழுதியவர்களில் அனேகர் அவர்களின் வீழ்ச்சிக்கு பின்வரும் காரணங்களைத் தவறாது குறிப்பிடுகின்றனர்.சக இயக்கங்களை அழித்தமை, மாற்றுக் கருத்துக்களில்லாத இறுகிய ஒற்றைத் தன்மை, முஸ்லிம் மக்களை வெளியேற்றியமை, ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தமை, உலகின் புதிய ஒழுங்கைக் கவனத்தில் கொள்ளாமை என்பவைகளாகும்.

இவை, கண்ணி வெடிகளிற்குப் பயந்து அங்கும் இங்கும் விலகாத ஒரு நேர்கோட்டுத்தன்மை கொண்டவையாகவே இருக்கிறது. உலகின் புதிய ஒழுங்கு தவிர்ந்த ஏனையவை, ஒரு விடுதலை இயக்கம் என்ற வகையில் அவர்கள் மேற்கொண்டிருக்கக்கூடாத செயற்பாடுகள்தான். விடுதலைப் புலிகள், தமிழ் மக்கள்மீது அக்கறை கொண்டிருந்தாலும், அவ்வக்கறை இராணுவ அமைப்பிற்கு மேலான நிலையில் வைக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால், இவைகள் நீதியை விரும்புபவர்களின் கவனத்திற்குரியனவாக இருப்பவைகளே தவிர, சர்வதேச ஆதிக்க அரசுகளின் உண்மையாக கவனத்துக்குரியவை அல்ல. இவற்றில் ராஜீவ் காந்தியின் கொலை ஒரு விதிவிலக்கு. உண்மையில் இக் கொலைக்கு இந்தியா தனது வல்லாதிக்கக் கனவுகளின் பின்னணியிலேயே அதிக அழுத்தம் கொடுத்தது. அது விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு தானாக அவர்கள் மடியில் விழுந்த கனி.

அக் கொலை நடைபெற்றிருக்காவிடினும், இந்தியா அவர்களை அழித்தே இருக்கும். வேறு காரணங்களைத் தேடியிருக்கும் என்றே நான் கருதுகின்றேன். ஏனைய சக இயக்கங்கள், மாற்றுக் கருத்துக்கள், முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் போன்றவைகள் வல்லாதிக்க சத்திகளின் உண்மையான, நேர்மையான கவனத்துக்குரியவைகளாக இருந்தால், இன்றைய உலக நாடுகளில் அனேகமானவை அழிவுக்குள்ளாக்கப்பட்டிருக்கவேண்டும் அல்லது ஒவ்வொரு நாடும் தனக்குத்தானே குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.

நீதியின் நிமித்தம் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டிருந்தால், அதே நீதியின் நிமித்தம் ஒவ்வொரு நாடுகளும் தற்கொலை செய்துகொள்ளும் அரசுகளாக மாறியிருக்கவேண்டும். அதுவே அவர்களிற்குரிய தகுதியும் நீதியுமாகும்.

வல்லரசு நாடுகள் அதுவும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை போன்றவை உலக வளங்களின்மீது தீராக் காதல் கொண்ட நாடுகள் என்பதை புதிதாகச் சொல்லிவைக்க வேண்டியதில்லை. வல்லாதிக்க நாடுகள் விடுதலைப் புலிகளின் அழிவுக்கான வரையறைகளை ஏன் வகுத்துக்கொண்டது? இதற்கான வேரினை 08-04-1990ல் அனிதா பிரதாப்பிற்கு பிரபாகரன் அளித்த செவ்வியில் கண்டுகொள்ளலாம்.

‘எமது மக்களின் சுதந்திரத்திலும், விடுதலையிலும் எந்த ஒரு சக்தி தலையிடுவதற்கும் நாம் அனுமதிக்க மாட்டோம்’.

‘எந்த ஒரு அன்னிய சக்தியும் எங்கள் பிரச்சனையில் தலையிட்டு எங்கள்மீது ஆதிக்கம் செலுத்தவும், நாங்கள் தொடர்பான முடிவு எடுப்பதையும் நாங்கள் விரும்பவில்லை’.

அன்னிய சக்திகள் என்பது, ஈழத்தமிழர் பிரச்சனையை மையமாக வைத்து சாதுரியமாக உள் நுழைந்துகொண்ட பின்னர், தமது பொருளாதார நலன்களுக்குரிய தளமாக, தமிழீழ மண்ணைப் பாவிப்பதை நோக்காகக் கொண்ட எல்லா நாடுகளும்தான். திருமலையின் புல்மோட்டையில், முன்பு இலங்கை அரசின் அனுமதியுடன் ‘இல்மனைட்’ கனிமப் பொருளுக்குரிய மண்ணை சேகரித்துக்கொண்டிருந்த யப்பானியரை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தியமையை இங்கு நினைவுகூரலாம்.

விடுதலைப் புலிகளது தலைவரது மேற்கூறிய தன்மையை மாற்றுவதற்காக ‘பெரியண்ணன்’ இந்தியா உட்பட அனேக நாடுகள் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளிலும் மறைமுகமான ஆசை வார்த்தைகளிலும், பயமுறுத்தல்களிலும் முயற்சித்தது. இதற்கு 1987ல் புது டில்லியின் ‘அசோகா விடுதியில்’ இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்கும்படி, பிரபாகரனுடன் இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்சிற் மேற்கொண்ட உரையாடல்களே சாட்சி. தமிழர் உரிமை சார்ந்து பிரபாகரன் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் தயாராக இருக்கவில்லையென்பதை பின்னர் டிக்சிற் முதலமைச்சர் எம்.ஜி. ஆருக்கு இவ்வாறு கூறினார்.

”தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றனர். ஆனால் இவர்கள் மட்டும் இதை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர வேறு எதையும் இவர்கள் ஏற்கமாட்டார்கள்போல் தெரிகிறது….”

2002ல் சந்திரிகா பண்டாரநாயக்காவை ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்காவை பிரதமராகவும் கொண்ட சிறிலங்கா அரசிற்கும், விடுதலைப் புலிகளிற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்பின், அமெரிக்காவில் நடைபெற்ற நிதியுதவும் நாடுகள் மகாநாட்டில் விடுதலைப் புலிகள் அழைக்கப்படாமையினால், ரோக்கியோவில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகள் மகாநாட்டில் பங்கு கொள்ள விடுதலைப் புலிகள் மறுத்துவிட்டனர். இந்த முடிவை மாற்றி, அவர்களை அந்த மகாநாட்டில் பங்குபற்ற வைக்க அனைத்து நாடுகளும் வற்புறுத்தியபோதும் அவர்கள் உறுதியாக மறுத்தமையையும் பின்னர் 2003 ஜுலையில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் ஊடகவியலாளர் சங்கப் பிரதிநிதிகளிடம்

”எந்த வல்லாதிக்க சக்திக்கும் அடிபணியாமல் எமது குறிக்கோளில் உறுதியாகவுள்ளோம்;. இதற்காக நாம் எவ்வாறான சக்திக்கும் முகம்கொடுத்து வருகிறோம். இனிமேலும் முகம் கொடுக்கவும் தயாராகவுள்ளோம்.”

என்று கூறியதையும் நினைவு கூரலாம். இது அனைத்துலக நாடுகளிற்கும் தெளிவாக ஒன்றை உணர்த்தியது. பிரபாகரன் எந்த சக்திகளிற்கும் வளைந்து கொடுக்கக்கூடியவர் அல்ல என்பதைத்தான்.

இந்த அழுத்தமான விட்டுக்கொடாமை என்பது மேற்கத்தைய, ஏன் இன்றைய கீழத்தேசங்களிலும் ‘இராஜதந்திரம்’ என்ற அரசியல் சொல்லின் அர்த்தத்துடன் முற்றும் முரண்படுகிறது. குறிக்கப்பட்ட நோக்கை அடைவதற்கு எப்படியும், எல்லா விதங்களிலும் எல்லா அறநெறிகளிற்கும் மாறான வழிமுறைகளிற்கூட செயற்படலாம் என்பது இந்த இராஜதந்திர விதிகள்.

இந்த தந்திர வழிகள் மூலம் தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள முடியாது போய்விடின், நேரடியாக ஆயுத பலத்தின்மூலம் தம் நோக்கினை அடைந்து கொள்ளலாம். இதுவே நியாயம் அல்லது உலகின் ஒழுங்கு. இந்தக் கருத்தை தமது கட்டுப்பாட்டிலுள்ள தகவல் வெளிப்பாட்டுச் சாதனங்கள் ஊடாக உருவாக்கிக்கொள்வார்கள்.

இந்த வழிமுறைக்கு, மாறிவரும் புதிய ஒழுங்கின் வல்லாதிக்கப் போட்டியின் நெளிவு சுழிவுகளிற்கு ஏற்ப, பிரபாகரனின் அழுத்தமான விட்டுக்கொடாமை உவப்பானதாக இல்லாமல் போனது மாத்திரமல்ல, அது ஆபத்தான அடையாளமாகவும் காணப்பட்டது. ஏனெனில் வல்லாதிக்க நாடுகளின் நலன்களிற்கான சுரண்டலின் பகுதியாக பிரபாகரனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களைக் கொண்டுவரமுடியாது என்பதை உணர்த்தின.

இந்த விட்டுக்கொடாமை, தமிழர் வாழ்வு சார்ந்த அகம், புறம் என்ற அடிப்படையில் மானம், வீரம் என்ற தொன்மைக் கருத்தமைவுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கலாம். கொண்ட கொள்கை வழுவாமை வீரத்தின் குறியீடாகவும், சந்தர்ப்பவாதம் துரோகத்தனமாகவும் கருதப்பட்டது. உயிர்வாழ்தல் மானத்துடன் தெடர்புடையதாக தமிழ் இலக்கியங்களில் பதியப்பட்டு இருந்தது. ‘மயிர் நீர்ப்பின் உயிர் வாழாக் கவரிமான்’ ஒரு முக்கிய குறியீடாகத் தமிழர் வாழ்வில் நிலை பெற்றது. புறமுதுகு காட்டாது மார்பில் காயத்துடன் போர்க்களத்தில் மடிவதொன்றே மகத்துவமுடையது. இவைகள் தமிழர் வாழ்வில் நீக்கமற நிறைந்திருந்தது. அத்துடன் மார்பில் காயத்துடன், வீரமுடன் மடிபவர்கள் நடுகைக் கற்கள் மூலம் வணக்கத்திற்குரியவர்களாகவும் ஆக்கப்பட்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் இந்த தமிழர் மாண்பு சார்ந்த கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்பட்டவர் என்பதற்கு சோழர் புலிக்கொடியும், அவர் தனக்குத் தேர்ந்துகொண்ட கரிகாலன் என்ற புனைபெயரும் போர்க்களத்தில் மடிபவர்கள் வணக்கத்திற்குரியவர்கள் என்பதை சுட்டும் மாவீரர் துயிலும் இல்லங்களும் மிக எளிமையான சாட்சியங்களாகும்.

இவை அவரது அரசியல் கருத்தமைவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்ற கருத்து இலகுவில் புறக்கணிக்கக்கூடியவையல்ல. இந்தத் தமிழர் மாண்பின் சாரம், மேற்கின் இராஜதந்திர அர்த்தங்களுக்குள் வளைந்து காரியத்தைச் சாதிக்கும் தன்மையைத் தொடர்ந்தும் தாமதப்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் தமது வளர்ச்சிப் போக்கில் ஒரு கெரில்லாப் போராட்ட அமைப்பு என்பதையும் தாண்டி, உலகம் அதுவரையிலும் எந்த விடுதலைப் போராட்ட அமைப்பிலும் காணமுடியாத வகையில் கடற்படை, விமானப்படை என்ற பூரண அர்த்தத்தில் கொள்ளாவிடினும் விமானத்திலிருந்து தாக்கும் திறன் ஆகியவற்றைத் தம்முள் கொண்டிருந்ததோடு ஓர் அரசிற்குரிய அனைத்துக் கட்டமைப்பையும் கொண்டிருந்தனர். இந்த அசுர வளர்ச்சி விடுதலைப் போராட்டங்களை எதிர்கொண்ட அனைத்து நாடுகளிற்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது.

விடுதலைப் புலிகளின் அரசிற்குரிய பரிமாணம் ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புகளிற்கும் முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதுதான் அந்த அச்சம். பல விதங்களிலும் மேற்கின் அரசியல் அமைவிற்கு முரணாக இருந்த விடுதலைப் புலிகளை எப்படி அழிக்கலாம் என்ற அவர்களின் கவலைக்கு மருந்தாக அமைந்ததுதான் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலிற்குப் பின்னர் அனைத்து அரசியல் நிலைமைகளும் தலைகீழாக மாறியது. விடுதலைப் போராளிகளாகக் கருதப்பட்ட அனைவரும் சடுதியாக பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டார்கள். தேசிய இனம் என்ற வரையறைக்குள் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்தவர்கள், தேசிய இனம் என்ற சொல்லிற்குப் பதிலாக சிறுபான்மையினம் என்ற சொல்லைப் பாவிக்கத் தொடங்கினர். இதன்மூலம் தேசிய இனத்திற்கு அளிக்கப்பட்டுவந்த வரையறைகள், உரிமைகள் இல்லாதொழிக்கும் நிலை உருவாகியது. தத்தம் நாடுகளில் தேசியப் பிரச்சனையின் போராட்டங்களை எதிர்கொண்ட அனைத்து நாடுகளும் இந்த ஒற்றை ஒழுங்கிற்குள் மிக மகிழ்;ச்சியாக இணைந்து கொண்டனர்.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு ‘எந்தப் பேயோடும் இணைந்து கொள்ளும்’ இலங்கையின் பொது அரசியற்போக்கிற்கு ‘வாராது போல்வந்த மாமணி’ச் சூழ்நிலை இது.

”அமெரிக்கா தனது பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் விடுதலைப் புலிகளைச் சேர்த்துக் கொண்டது, சர்வதேச அளவில் புலிகளைப் பலவீனப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் முதன்மையான பங்காற்றியிருக்கிறது’ என ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் உப நிரந்தரப் பிரதிநிதியும் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவருமான பீற்றர் போர்லிக் கூறியதை இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.

இந்தச் சர்வதேசச் சூழலை, தமிழ் ஆய்வாளர்கள் கருதியதற்கு மாறாக, உலக மாற்றங்களை விடுதலைப் புலிகள் நன்றாகவே உணர்ந்திருந்தனர் என்றே கொள்ளவேண்டும். அதனால்தான் அவர்கள் தாமாகவே முன்வந்து பேச்சுவார்த்தைக்குரிய கதவினைத் திறந்தார்கள். இரட்டைக் கோபுர தாக்குதல் நடைபெற்ற ஆண்டையும் (11-09-2001) விடுதலைப் புலிகளின் சமாதான முன்னெடுப்பிற்கான யுத்தநிறுத்த அறிவிப்பு ஆண்டையும் (24-12-2001) கவனித்தால் இது நன்கு புரியும்.

இரு தரப்பையும் சம தரப்பாக ஏற்றுக்கொண்டு பேச்சு வார்த்தைக்கு ஆதரவளித்த மேற்குலகம், அரசிற்குச் சார்பான நிலைப்பாட்டை உடனே எடுக்கத் தொடங்கியது. அதன் முதற்படிதான் முன்னர் குறிப்பிட்ட அமெரிக்க மகாநாட்டிற்கு விடுதலைப் புலிகள் அழைக்கப்படாமை.

சம தரப்பென்ற வகையில் விடுதலைப் புலிகளும் அழைக்கப்படவேண்டும் என்ற கருத்தை இலங்கை அரசு முன்வைத்திருந்தால் அரசின் நம்பகத் தன்மையையாவது அது உறுதிப்படுத்தியிருக்கும். ஆனால் அவர்கள் அதற்கு மாறாக உள்ளுர மகிழ்ச்சி அடைந்தமை, அவர்களது வழமையான நம்பகத் தன்மையின்மையையே உணர்த்தியது.

சமாதான காலத்தில் 14-06-2002 ல் முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற் புலிகள் 12 பேர் கடற்படையினரால் கொல்லப்பட்டனர். இது ஒரு பாரதூரமான விளைவாகவும், இதனால் ஏற்படும் விடுதலைப் புலிகளின் சீற்றம், யுத்த நிறுத்தத்தையே முடிவுக்குக் கொண்டுவரும் எனவும் பலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 1987ல் விடுதலைப் புலிகள், இந்திய இராணுவத்தினருடன் பொருதிக்கொண்டதற்கும் இதை ஒத்த சம்பவமே காரணமாயிருந்தது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளலாம். இதேபோன்ற முறிவு ஏற்படாமைக்கு, இந்த பொறியை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள் என்பதுதான் காரணம்.

சுமாதானப் பேச்சு வார்த்தைகளின்போது இரு தரப்பும் நியாயமான தீர்வின் அடிப்படையில் ஈடுபடவில்லை என்பது, அக்காலத்திலேயே பலராலும் உணரப்பட்டது. பேச்சுவார்த்தையை புலிகள் முறியடிப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த அரசும், அரசு முறியடிப்பதற்கான சந்தர்ப்பங்களை புலிகளும் ஏற்படுத்த முனைந்த வேளைகளில், இந்தியா உட்பட வல்லரசு நாடுகள், புலிகளை முறியடிப்பதற்கான சந்தர்ப்பங்களிற்காகக் காத்திருந்தது.

உதவி வழங்கும் ரோக்கியோ மகாநாட்டில் விடுதலைப் புலிகள் பங்குபற்ற மறுத்தமை அவர்களிற்கான அபாயத்தை முன்னறிவித்தது. அக்கால அமெரிக்க இராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரினா ரொக்கா ”இன நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கான சமாதான முயற்சிகளின் சிறந்த நலன்களாகவும், தமிழ் மக்களின் நலன்களிற்காகவும், ஏன் தங்களின் நலன்களிற்காகவும் விடுதலைப் புலிகள் ரோக்கியோ மகாநாட்டில் பங்குபற்ற வேண்டும்” என்றார்.

இதில் ‘தங்களின் நலன்’ என்ற வார்த்தை, விடுதலைப் புலிகளின் முதுகைத் தடவுவதற்கல்ல என்பதை அனைவரும் அறிவார். அதேவேளை அமெரிக்காவின் பிரதி ராஜாங்க அமைச்சர் றிச்சட் ஆமிரேஜ் ”பேச்சுவார்த்தைக்கு வராத ஒரு குழு சர்வதேசத்தை மிரட்டும் தொனியில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். இதனோடு பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களை, குறிப்பாக பாதுகாப்பு வலயம் போன்றவைகளின் இழுத்தடிப்புக்கள், அரசால் மறுக்கப்பட்ட இடைக்காலத் தீர்வு போன்றவைகள் தமிழீழத்தில் வீசப்போகும் பெரும் புயலுக்கான கருமேகங்களின் திரட்சியானது.

இக் கருமேகங்களின் பின்புலத் திரட்சியில் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் Project Beacon உருவாகியது. இத்திட்டம் இலங்கையுடன், இந்தியா உட்பட பல வல்லரசு நாடுகளின் உதவியுடனும் நல்லாசியுடனும் 2005ல் ஒஸ்லோவில், உருவாக்கப்பட்டது.

2006ல் இருந்து 2009 வரையுமான காலப்பகுதிக்குள் மூன்று கட்டங்களாக விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டுவது, யுத்தத்தில் பொதுமக்கள் படுகொலைகள் கட்டற்றுப் போகும்போது புலம்பெயர் நாட்டு மக்கள் கிளர்ந்தெழாதவாறு முக்கியமானவர்களைக் கைதுசெய்தல், மக்கள் பீதியடைந்து விடுதலைப் புலிகளிற்கு எதிராக திரும்புவார்கள் என்ற நம்பிக்கையும், தொடர் குண்டுவீச்சில் தமிழர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்தல், போன்ற உப திட்டங்களும் அதனுடன் இணைந்திருந்தது.

இதன் பின்னர் இந்தியா சீனா இரசியா பாகிஸ்தான் போன்ற முக்கிய ஆசிய நாடுகளினதும், வல்லரசுகளின் உதவியுடனும் 25-05-2006ல் தொடங்கிய போர் 18-5-2009ல் விடுதலைப் புலிகள் சிதறடிக்கப்பட்டபின் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றிக்கு சில நாடுகள் அளித்த அதீத வாழ்த்துக்கள், விடுதலைப் புலிகளின் அழிவை அவர்கள் எந்தப் பின்னணியில் விரும்பியிருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்தும்.

இந்த இனப்படுகொலையின் வெறியாட்டத்தின் பின், கிட்டத்தட்ட மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை, இலங்கை அரசு வதைமுகாமில் மிருகங்களாக அடைத்து வைத்துவிட்டு, தமிழர்களை வெற்றிகொண்டதைக் கொண்டாடிய விதம், பல நாடுகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியபோதிலும், வெற்றி மமதையில் இருந்த பேரினவாத அரசிற்கு அதுவெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

வெற்றியின் பின்னர் சர்வதேச நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தியாகூட வெளியிட்ட அறிக்கைகளில், இவர்களின் உதவிக்கும் நெறிப்படுத்தலுக்கும் வெற்றிக்கும் பிரதிபலிப்பாக சில வாக்குறுதிகளை இலங்கை அளித்திருந்ததாக அறியமுடிகிறது. அது விடுதலைப் புலிகளின் அழிவிற்குப் பின்னர் அரசு ஒரு அரசியல் தீர்;வுத் திட்டத்தை முன் வைக்கும் என்பதுதான்.

ஏனெனில் இந்தியா, அமெரிக்கா, ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றியம் அனைத்தும் ஒரே விடயத்தை இலங்கை அரசிற்கு திரும்பத்திரும்ப வலியுறுத்திக்கொண்டு வருகிறார்கள். அது அரசு வாக்குறுதி அளித்தபடி இனப் பிரச்சனைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வுத்திட்டத்தை விரைவாக முன்வைக்க வேண்டும் என்பதுதான். இத்திட்டம் இந்தியாவால் முன்வரையப்பட்ட 13வது அரசியல் சீர்திருத்தச் சட்டமும் அதற்கு அப்பாலும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

இக்காலங்களில் இலங்கை ஜனாதிபதியும் அவரது கட்சி அங்கத்தவர்களும் வெளியிட்ட முக்கியமான சில கருத்துக்கள் இவை

”இலங்கையில் சிறுபான்மையினர் என்ற ஒன்று இல்லை. அனைவரும் இலங்கையரே”

”அவர்கள் (தமிழர்கள்) எது வேண்டுமென்று நினைக்கிறார்களோ அது அவர்களிற்கு கிடைக்காது”

”விடுதலைப் புலிகள் அழிந்தபிறகு தமிழர் பிரச்சனையென ஒன்றும் இல்லை”

”முதலில் மீள்குடியேற்றம் அதன்பிறகே அரசியல் தீர்வு”

மீள்குடியேற்றத்திற்கு மூன்றுமாத காலஅவகாசம் பின்னர் கண்ணிவெடி அகற்றுதல் என்ற பேரில் உத்தேசமாக ஐந்து வருடங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றது. நிவாரணப் பணியாக பணம் வரும் வாசலாக அகதிகள் இருப்பதனால், அகதிகள் குடியேற்றத்தை அரசு முதன்மைப்படுத்தாது. அடுத்த ஆண்டும் மக்களைப் பராமரிக்க மேலும் 225 மில்லியன் டொலர்கள் தேவையாக இருப்பதாக இலங்கை அரசு கோரியுள்ளது இதனை உறுதிப்படுத்தும்.

இந்த உண்மையை ஐ.நா.சபை உணரும் காலம் இன்னும் கனியவில்லைபோலும். இறுதி யுத்தத்தின்போது 400 போராளிகள்தான் இருக்கின்றார்கள் என்று அறிவித்த அரசு பின் அதன் எண்ணிக்கையை மேலும் 10000 மாக உயர்த்திக் கொண்டது. இந்த எண்ணிக்கை அரசின் தேவைகளிற்காக காலத்திற்குக் காலம் தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டே போகும்.

அரசின் மேற்கூறிய அறிக்கைகளும் காலம் கடத்தல்களும், கடந்த அறுபது ஆண்டுகாலமாக ஈழமக்கள் கடந்துசென்ற வழியில் சர்வதேசம் வருவதற்கான கதவு திறக்கப்படுகின்றது என்பதை குறிக்கின்றது. மீள்குடியேற்றத்தின் பின்னர் அரசியல் தீர்வு என்பதனால் இப்போது ஐ.நா.சபை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன மீள் குடியேற்றம் பற்றி உரத்துக் குரல் கொடுக்கின்றனர். இதுவும் அரசின் காதுகளில் விழுவதாக இல்லை. இதன் அதிருப்தி வெளிப்பாடுகள் பல்வேறு விதங்களில் வெளிவரத் தொடங்கிவிட்டது.

பல்வேறு தடவைகள் கோரிக்கை விட்டுக் களைத்துப்போன ஐ.நா.பொதுச் செயலாளர் நாயகம் பான்.கி.மூன் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தனாய் நியுயோர்க்கில் நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்காவிடம் ”மீள் குடியேற்றத்தைத் துரிதப்படுத்தத் தவறினால் கசப்புணர்வதான் தீவிரமடையும்” என்று கூறியுள்ளார்.

இதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு ஆணையாளர் பெனிற்றா பெரேரோ வால்ட்டனர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்சவைச் சந்தித்து ”இடம் பெயர்ந்த மக்கள் மிகத் துரிதமாக மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல் இந்திய அரசியல் ஆய்வாளர் கேணல் ஹரிகரன் ”சிறிலங்கா அரசியல்வாதிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். வேண்டும்போதெல்லாம் அவர்கள் எதனை வேண்டுமானாலும் பேசுவார்கள், செய்வார்கள். முன்னர் இனப் பிரச்சனைகளிற்கு தீர்வாக சமஷ்டி பற்றி பேசினார்கள். இப்போது அதைத் தூக்கி வீசிவிட்டு அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகிறார்கள். சமஷ்டி போன்று எதிர்காலத்தில் இதுவும் அரசியலிலிருந்து காணாமல் போய்விடும். சிறிலங்கா தமிழர் விடயத்தில் பாராமுகமாய் இருந்தால் கடந்த முப்பது வருடங்களில் அது சுற்றிவந்த சுழற்சியை மீண்டும் ஒருமுறை சந்திக்க வேண்டியிருக்கும்” என்கிறார்.

இப்போது மீண்டும், தீர்வுத் திட்டத்திற்கான அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ”பொதுத் தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வுத் திட்டம் வெளியிடப்படும்” என்கிறார். இதன் தொடர்ச்சியாக சர்வதேசம் சில தெளிவான நிலைப்பாடுகளை உணர்த்த முன்வரும்போது, தமிழர்களின் அர்த்தமுள்ள அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமா? அல்லது சீனாவின் பின்னணியின் பலத்தில் ‘உனக்கும் பெப்பே உனது அப்பனுக்கும் பெப்பெ’ என்பதான இலங்கையின் இயல்பான மனநிலை வெளிவருமா? அல்லது மேற்குலகின் பொருளாதாரத் தேவைகள்தான் முதன்மைப்படுத்தப்படுமா? இக் கேள்விகளே முக்கியமானது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் GSP + வரிச் சலுகை தற்காலிகத் தடையுடன் நீள்கிறது. இப்போதைய அதன் தற்காலிக நிறுத்தமும் அதைப்பெற அரசு எடுக்கும் அதிதீவிர முயற்சியும், அமெரிக்காவினால் வெளியிடவிருந்த சிறிலங்காவின் மனித உரிமை மீறல் அறிக்கையும், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சரின் அமெரிக்க பயணத்துடன் மெல்ல பின்தள்ளப்பட்டு, மீண்டும் வெளியிடப்பட்டுவிட்டது. மீண்டும் அமெரிக்கா தன் சுயநல அடிப்படையில் இலங்கையைப் பகைத்துக்கொள்ளக்கூடாது என்று தீர்மானித்து இருக்கிறது.

இந்தியாவும் பெரிய அழுத்தம் எதனையும் இலங்கை அரசிற்கு கொடுக்கப் போவதில்லை. இந்த ஆதரவான போக்கு அல்லது இதற்கு எதிரான கடுமையான போக்கு ஆகியவற்றின்மூலம், அர்த்தமுள்ள தீர்விற்குப் பதிலாக ஏதாவது ஒன்று, தீர்வு என்ற பெயரில் தமிழர்முன் வைக்கப்பட, இந்தியா, மேற்குலகின் அரசியல் நலன்கள் முதன்மைப்படுத்தப்படலாம்.

இறுதியில் யார்யாருடைய நலன்களிற்காக அழிக்கப்படுவதும், பயன்படுத்தப்படுவதுமான ஒரு இனமாக ஈழத்தமிழர்கள் ஆகிப் போனார்கள்

நன்றி நெருடல் இணையத்தளம் !

Monday, February 22, 2010

U.S.-based Video Processing Company Confirms Authenticity of Channel 4 Video

Evidence from reputable and established forensic firms on the authenticity of the Channel-4 execution video continues to accumulate, and the latest is a Pasadena, California, forensic firm which disclosed Friday that one of the firm's technical representative, Jeff Spivak, assisted Professor Philip Alston, UN Special Rapporteur on extrajudicial, summary or arbitrary executions, in analyzing the video for authenticty.


The firm claimed that "in part, due to the image processing results performed with the Cognitech Video Investigator software, UN Rapporteur Professor Phillip Alston, has requested a full scale investigation into the incident," indicating a positive conclusion that video was authentic. While Mr Spivak's name was mentioned in Prof Alston's earlier report the firm's identification was disclosed only Friday. The video, first aired in August 2009 by the British Channel-4 TV group, showed Sri Lanka Army (SLA) soldiers summarily executing Tamil victims stripped naked and their hands crossed and tied behind their backs.

Alston, while noting Mr Spivak's conclusion that the "content analysis revealed no breaks in continuity, no additional video layers, and no evidence of image manipulation," said that Mr Spivak was unable to explain two elements, the date discrepancy, and the 17 frames at the end of video. A Nokia expert who is the author of signature addition software for Nokia phones had later explained that the 17 frames (or more) can be added to the trailor by the owner of the video to add his "signature." US-based pressure group Tamils Against Genocide (TAG) has access to the Nokia author who has expressed his willingness to testify in any court of law should this matter is raised in any war-crimes investigations, a TAG spokesperson had previously stated.

The disclosure by the Pasadena firm further said, "Cognitech(R) Video Investigator(TM)forensic software was used to process the first and second instances of visible weapon discharge, as well as the apparent drainage/splatter of blood and/or other fluid from the second victim's head in the video by using an accurate velocity estimation, corresponding video motion stabilization process, then artifact free zooming of patented regions of interest. The motion-stabilized/zoomed versions of these segments were provided to the UN Rapporteur for further distribution to the forensic pathologist and terminal ballistics expert."

A TAG spokesperson clarified that "this statement by the firm indicates that authenticity was no longer an issue, and the analysis was proceeding further after removing some of the video artifacts that will allow for more accurate analysis on ballistics and pathology." Under the "complementarity" doctrine mandated by International Law, United Nations and some members of the international community have been urging the Sri Lankan Government to conduct its own investigations into the alleged war-crimes committed by Sri Lanka military during the final phases of war.
International legal experts are beginning to assert that Sri Lanka has exhausted the space given for such investigations, and time is closing in for the international community to demand a full scale independent international investigation into alleged war crimes. "Now that Defense Minister Rajapaksa has rejected such an investigation by the GOSL itself, under international law the onus is now upon U.N. Secretary General Ban Ki-moon to appoint a war crimes investigation body with respect to Sri Lanka as he has recently done in Africa," Prof. Boyle recently said.

VP, Death, and the Myth!



The latest story at Tamilwin - http://www.tamilwin.com/view.php?2a36QVj4b4cF98224beSIPz0e22p1GQdcd2GipD3e0dpZLuQce04g2F92cdbHjoQ30 - is stirring the controversy surrounding the death of VP once more. It is astonishing to see how the person who is Srilankan army officer on this image resembles the body of VP that was shown in all Srilankan channels.




It's the real image of VP that was taken on 2007 Maveerar Day.


There were mixed opinions among pro-Tamils about the death of VP prior to this news story at Tamilwin as some thought he may have been killed and some simply said he never dies. For any common-sensed person, it was hard to reject the opinion of death of VP earlier as all the evidences in Mulliyavaikal directly pointed his death. Mind you, well into first week after the alleged killing of VP on May 18th by SLA, KP who is in Srilankan army custody now maintained his position that VP was alive then. I will reproduce few excerpts of the Tamilnet’s interview with KP that took place on May 18th, 2009.


TamilNet: The Sri Lankan Government has declared the war won and has claimed that Mr Pirapaharan, the leader of LTTE has been killed. Has Colombo really won the war?

S. Pathmanathan, Head of LTTE's International Diplomatic Relations

Pathmanathan: The Sri Lankan government makes unverified claims. I am only able to ascertain that our National Leader is alive and well. It is true that many of our senior members and leaders have either given up their lives or been treacherously killed. This is very unfortunate, but it is important to realize that our struggle will continue until the aspirations of our people are realized.


The Sri Lankan Government may have declared a military victory. But it does not realize that it is a hollow victory. It has completely lost the trust and confidence of the Tamils in Sri Lanka.


One thing is clear that LTTE hierarchy was confident of KP then, otherwise they wouldn’t have moved him into higher up the position of Head of LTTE’s international relations when things started to get serious in the midst of Wanni war. After the executions of political leaders- Nadesan, Pulidevan and along with 300 others- on May 17th, the remaining LTTE hierarchy, assume VP was alive then, may have smelled the rat in KP and that put them not to share the info with KP anymore. Either way LTTE intelligence wing that learned the lessons of its life in the final week of battle in Wanni may have awaken from its sleep in time to think what was right for Tamils and its organization by going silent about the death of VP, even if he was alive. What puzzling to me is that why LTTE allowed the common enemy – GoSL- takes control of KP saga. The seismic proportions of Wanni events may have prevented LTTE think clearly for some time. It looks to me they’re still figuring out the good and bad apples even in their organization itself now.

Revelation of VP alive can bring greater harms than VP dead for Tamils for the time being. Let it be what is now that VP is dead. For your own euphoria, you may bring harm to those 14,000 Tamil youths who’re in SLA’s custody now and to those who lost loved ones and their own limps in the war from any chance of rebuilding their remaining scattered lives.

As it seems, LTTE is slowly overhauling its ship now. Look at their new website – www.lttepress.com – and it looks to me real site of their own. Don’t jump on the bandwagon quickly, and the GoSL and its Intel channels can double or even triple cross you here with their abundance of Tamil traitors from its arsenal. If you visit pulikalinkural.com, you would know that it is functioning well now. All it suggests that they’re in the fast-paced rebuilding mode now. The immutable fact of life for anyone is that there are two states in SL now regardless of VP’s existence.
 
Source : Puligal.blogspot.com

Saturday, February 20, 2010

உயிருடன் உள்ளார் பிரபாகரன்!

ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத்தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள்.

நெருங்கிவரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத்தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர்வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமானசிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட,புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

களத்தில்இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின்இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்றவேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந்தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக்கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத்தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது.ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான்அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம்கொடுத்திருக்கிறார்கள்.

தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின்சம்மதித் துள்ளார்.

இதையடுத்து,மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம்குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத்தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாகவியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5000கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமானகரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட்டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்களராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின்மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்துவீரச்சமர் புரிந்தனர்.

தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத்தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும்புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி,பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

புலிகளின்வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்தகோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர்.அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது.அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்குஅழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில்பிரபாகரனை ஏறச் செய்தனர்.

அதேவேளையில்,வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது.மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்கவருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதைகல்லாக்கிக்கொண்டு, இலட்சியத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காகபாதுகாப்பாக வெளியேறினார் சூசை.





புலிகளின்அடுத்தடுத்து 23 தற்கொலை தாக்குதல் சம்பவங் களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத் திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்களராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலியானார். புலிகளின் கடைசி நேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலையவைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து,முன்னேற்றத்தை முடக்கியது.

இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகியோரையும் பாதுகாப்பாகவெளியேற்றுவது சாத்தியமானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்களராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமிடங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விடலாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையிலிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப் பயணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங் கள் தெரிவிக்கின்றன.

சிங்களகடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வதுபுலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற்படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந்திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு.பலவித பிரஷர்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படைதனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப்பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள்,எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியேமுன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்தபகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது.எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன.

அந்தத்தாக்குதலின் போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்கமுயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள்,ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட்லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபாகரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ்வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக்கு பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டிருந்தன.





ஞாயிறு இரவிலும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத்தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதிகளின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசுகொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப்முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர்பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கிவைத்திருந்தனர். சில உடல்கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள்ளிட்டபுலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம்.புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா,அவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு,உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்களராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத்திரும்பிய கருணா, "மொக்கச் சிங்களனுங்க கோட்டை விட்டுட்டானுங்க' எனத் தனதுசகாக்களிடம் சொல்லியிருக்கிறார்.

இந்தநிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியஅதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில்,நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புங்கு களைமீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின்தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும்கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சயனைடு குப்பி வைத்திருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டியபடத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பலமுரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புங்குகளைக் காட்டியதுடன், மதியம் கண்டுபிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.


தண்ணீரில்கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல்இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்கமுடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்களஅரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்தவேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதியான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிரபாகரனின் மனைவி,மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.

தன்னுடையபாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச்செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங்களில் உரையாற்றும் போதுசிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கிறார்கள் மிக மிக முக்கியமானவர்கள்.