Thursday, February 25, 2010

பிரபாகரன் குறித்த செய்திகள்: காலம் தான் சொல்ல வேண்டும்- ருத்திரகுமாரன்

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த செய்திகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன்.

இதுகுறித்து இலங்கைத் தமிழ் இணையங்கள் வெளியிட்டுள்ள செய்தி..
பெண்ணிய உளவியல் ஆய்வாளரான பரணி கிருஷ்ணரஜனி தலைமையிலான ஐவர் குழு ருத்திரகுமாரனுடன் சிறப்பு நேர்காணலை நடத்தியது.

அப்போது, பிரபாகரனின் மரணம் குறித்த கேள்விக்கு ருத்திரகுமாரன் பதிலளிக்கையில், சில விவகாரங்களில் எது உண்மை என்பது சர்சைக்கு உள்ளாகும்போது அதற்குரிய பதிலை காலம் தான் வரலாற்றில் பதிவு செய்கிறது. பிரபாகரன் பற்றிய சர்ச்சைக்கும் இது பொருந்தும் என்று ருத்திரகுமாரன் கூறினார்.


கே.பி. என்னும் குமரன் பத்மநாதனின் வழிகாட்டலில் நாங்கள் செயல்படுவதாக சிலர் வதந்திகளை பரப்ப முயற்சி செய்கின்றனர் என்றும் எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகைய வதந்தி நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைக்கும் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் உள் நோக்கத்திலேயே செய்யப்படுகிறது என்றும் அவர் கூறியதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment