Monday, May 3, 2010

நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் கனடியத் தமிழர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களிப்பு

ஏப்ரல் மாதம் 2ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இன்று கனடிய நேரப்படி மாலை 3.45. தற்போதைய சூழ்நிலையில் ஸ்காபுறோ மற்றும் ரொறன்ரோ ஆகிய நகரங்களுக்குச் சென்ற நமது செய்தியாளர்கள் தரும் தகவல்களின்படி கனடியத் தமிழர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களிப்பதாகவும் தங்களுக்கு பிடித்தமான வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில் அத்pக கவனம் எடுப்பதாகவும் அறியப்படுகின்றது.


குறிப்பாக ஸ்காபுறொவில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபத்தில் காலை 10.00 மணி தொடக்கம் நடைபெறும் வாக்களிப்பில் மக்கள் மிகவும் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்களிப்பதாகவும் சிலர் அங்கு காத்திருப்பதற்கு பொறுமையின்மை காரணமான வேறு வாக்களிப்பு நிலையங்களை நாடிச் செல்வதாகவும் விசேடமான முதியோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சொல்வதாகவும் அவர்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படியே வாக்களிப்பதாகவும் நமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்..

இதுவரையில் எந்த ஒரு வாக்களிப்பு நிலையத்திலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை எனவும் மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுவதாகவும் கனடியத் தமிழர்கள் தங்கள் தங்கள் கருமங்களை முடித்து விட்டு வாக்களிப்பு நிலையங்களை நாடி அவரசமாகச் செல்லுவதை காணக்கூடியதாக உள்ளதாகவும் கனடிய நாடு கடந்த அரசிற்கான நிர்வாக அலுவலகம் தெரிவித்தது.

மேலும் அந்த அலுவலகம் தகவல் தருகையில் இன்றிரவு சுமார் 10.00 மணியளவில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள் ஊடகங்களுக்கு அறியத்தரப்படும் என்று தெரியவருகின்றது.


No comments:

Post a Comment