Tuesday, November 9, 2010

தலைவர் பிரபாரகன் தலமையில் 12 ஆயிரம் போராளிகள் வெளிநாட்டில்... : குழப்பத்தை ஏற்படுத்தும் இந்திய ஊடகங்கள்

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தலமையில் வெளிநாடொன்றில் 12 ஆயிரம் போராளிகள் பயிற்சி பெற்றுவருவதாகவும் வெகுவிரைவில் தலைவர் அவர்களின் வருகையை எதிர்பார்க்கலாம் என்றும் தமிழ் நாட்டில் உள்ள சில பத்திரிக்கைகள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான செய்திகளை வெளியிட்டு பரபரப்பாக்கியுள்ளனர்.


தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தலமையில் வெகு விரைவில் ஈழம் மீட்கும் போர் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதற்காக ஆயுதங்கள் வாங்குவதற்காக புலிகளின் அனைத்துலக செயற்பாட்டாளர்கள் பணம் சேர்க்க ஆரம்பித்துள்ளதாகவும் அந்தப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
தற்போது புலம்பெயர் தேசங்களில் புலிகள் அடுத்தகட்ட யுத்தத்தை ஆரம்பிப்பதற்காக பணம் சேர்க்கும் முயற்சியில் முன்முரமாக ஈடுபட்டுள்ளதாக அப்பட்டமான பொய்யை செய்தியாக வெளியிட்டு குறுகிய சில மணி நேரத்துக்குள் பல லச்சம் பத்திரிக்கைகளை விற்று பணமாக்கியுள்ளனர்.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு பலராலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அதை தடுக்கும் விதமாகவும் புலிகள் போரை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அது இந்திய நாட்டுக்கு ஆபத்தாக முடியும் என்றும் செய்திகளை இந்திய புலனாய்வு அமைப்பான றோவின் வேண்டுதளுக்கிணங்க வெளியிட்டுள்ளனர்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் விழுத்துவது போல் குறிப்பிட்ட செய்தி றோவால் இரண்டு முக்கிய விடயங்களை குறிவைத்து தமிழ் நாட்டு பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்று புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீடிப்பது.

இரண்டாவதாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இந்த மாவீரர் நாள் அன்று மக்கள் முன் தோன்றுவார் என்ற செய்தியையும் பரப்பி தலைவரின் வருகையை எதிர்பார்த்து தவமாக தவமிருக்கும் ஆதரவாளர்களை சலிப்படைய வைப்பதே இவர்களின் நோக்கமாகவுள்ளதாக கருத முடிகின்றது.

தமிழீழ தனி நாட்டை விரும்பும் தமிழ் நாட்டு ஈழ ஆதரவான மக்களே! பத்திரிக்கைகளை விற்பதற்காகவும் றோவிடம் பணம் வாங்கியும் சில பத்திரிக்கைகள் இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்புவதே இவர்களின் முழு நோக்கம், எனவே இவ்வாறான செய்திகளை படித்து குழப்பமடையாமல் தெளிவாக இருங்கள்.

No comments:

Post a Comment