எதிர்வரும் காலத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதப்போரட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என நான் தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளில் உண்மையில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணைப்பாளர் திரு வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இனி எங்கள் அகராதியில் ஆயுதமே இருக்காது என திரு உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளதாக இந்திய சஞ்சிகையான ஜுனியர் விகடனில் வெளிவந்த நேர்காணல் தொடர்பில் உருத்திரகுமாரன் மேற்கண்டவாறு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தாயகத்தில் ஆயுதப்போராட்டம் வெடிக்குமா இல்லையா என்பதை அங்கு தோற்றுவிக்கப்படும் சூழ்நிலைகளே தீர்மானிக்கும். அதனை நாம் எதிர்வுகூறமுடியாது. ஆனால் அனைத்துலகத்தில் முன்னெடுக்கப்படும் எமது நடவடிக்கைகள் எந்த விதத்திலும் வன்முறைகளை கொண்டதாக அமையாது. அதனை தான் நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு உரிய அரசியல் தீர்வை இலங்கை அரசு முன்வைக்காது விட்டால் அங்கு ஒரு ஆயுதப்போராட்டம் மீண்டும் வெடிக்கலாம் என மேற்குலக நாடுகள் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருவதையும் நாம் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Source : www.tamilwin.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment