இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு ஐஸ்வர்யா ராய் சென்றால் அவரது படங்களை புறக்கணிப்போம் என்றும், அமிதாப் வீட்டு முன்பு நாளை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,
இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் மாதம் நடத்தப்படுவதாக அறிந்தோம். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை நடிகர் அமிதாப்பச்சன் முன்னின்று கவனித்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யாராயும் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக கேள்வியுறுகிறோம். இதற்காக மனவருத்தப்படுகிறோம். தமிழ் ரசிகர்கள் முழுமையாக அவரை நேசிக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் இந்த விழாவில் அவர் பங்கேற்பது தமிழ்க்கலைஞர்களின் உணர்வுகளுக்கு எதிரானது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
விழாவில் பங்கேற்பதை அவர் நிராகரிக்க வேண்டும். தமிழர்கள் மற்றும் தமிழ்க்கலைஞர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இவ்விழாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
தமிழர்களின், தமிழக்கலைஞர்களின் உணர்வை புரிந்து கொள்ளாமல் அமிதாப், ஐஸ்வர்யா ராய் இருவரும் இவ்விழாவில் பங்கேற்பார்களேயானால் ஐஸ்வர்யா நடித்துள்ள படத்தை ஒட்டுமொத்த தமிழர்களும் புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் ஐஸ்வர்யா ராய் நடித்த படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவரது படத்தை பார்க்காமல் புறக்கணிப்பார்கள்.
தமிழர்களின் மரணச் செய்தி தினமும் வந்து கொண்டிருக்கின்ற வேளையில் தமிழர்கள் கண்ணீர்க்டலில் மிதக்கும் நேரத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை மகிழ்விக்க இத்தகைய ஒரு விழா நடத்தப்படுவது தேவைதானா என்று அமிதாப் பச்சன் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.
தமிழர்களின் ஆதரவில் வசதி வாய்ப்புகளை தேடிக்கொண்ட ஐஸ்வர்யா ராய் தமிழர்களின் உணர்வுகளுக்கு மாறாக நடந்து கொள்ளக்கூடாது.
எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், இதற்கு முன் உதாரணமாக மும்பையில் உள்ள அமிதாப் வீட்டு முன்பாக நாம் தமிழர் இயக்கம் சார்பில் நாளை காலை முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் மும்பையில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாம் தமிழர் இயக்க தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று கூறியுள்ளார்.
இலங்கை செல்ல மறுத்த ரஜினி, கமலுக்கு நன்றி
தமிழர்கள் கண்ணீர் கடலில் மிதக்க இலங்கையில் ராஜபக்சேவை மகிழ்விக்க சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்துவதா என்று அமிதாப்பச்சனுக்கு இயக்குனர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அமிதாப் அழைப்பை புறக்கணித்த ரஜினி, கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சீமான்.
இதுகுறித்து சீமான் மேலும் கூறியதாவது,
இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் மாதம் நடத்தப்படுவதாக அறிந்தோம். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை நடிகர் அமிதாப்பச்சன் முன்னின்று கவனித்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இவ்விழாவில் பங்கேற்க கமல், ரஜினி இருவருக்கும் அமிதாப் விடுத்த அழைப்பை அவர்கள் இருவரும் புறக்கணித்துவிட்டதாக செய்தி வருகிறது. இவ்விழாவில் பங்கேற்க மறுத்த அந்த இரு கலைஞர்களுக்குக்கும் அனைத்து தமிழ்க்கலைஞர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்க்கலைஞர்கள் யாரும் இவ்விழாவுக்கு போகக்கூடாது என்று அனைத்து தமிழ்க் கலைஞர்களும் எதிர்பார்க்கிறார்கள். இதே காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாளும் நமக்கு இலங்கையில் இருந்து மரணச் செய்தியாகத்தான் வந்து கொண்டிருந்தன. அங்கு தமிழர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.
சென்ற ஆண்டு இதே நாளில் நடந்த நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தை மறக்கடிக்க திட்டமிட்டு இந்த விழா நடத்தப்படுவதாகவே கருதுகிறேன். இன்றைக்கும் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் முள்வேலிக்கு மத்தியில் கடும் சித்ரவதைக்கு ஆளாகி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment