விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களை சில தமிழ் அமைப்புகள் தேடிவருவதாக, போகொல்லாகம நிருபமா ராவிடம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் சில அமைப்புக்கள் வே.பிரபாகரன் எங்கு இருக்கிறார் எனக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய கருத்தை இவர் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவிடம் தெரிவித்திருப்பதன் உள்நோக்கம் என்ன என்பதே பலத்த சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
தேசிய தலைவர் இறந்ததாகக் கூறும் இலங்கை அரசு சமீபத்தில் பிரபாகரன் அவர்களின் மரண அத்தாட்சிப் பத்திரத்தை இந்தியாவுக்கு கையளித்ததாகக் கூறியதும், அதை சிதம்பரம் ஒத்துக்கொண்டார். ஆனால் பின்னர் இந்திய உளவு நிறுவனம் தமக்கு இதுவரை மரண அத்தாட்சிப் பத்திரம் கிடைக்கவில்லை எனக் கூறியதும் யாவரும் அறிந்ததே. இந்த நிலையில் பிரபாகரன் அவர்களை சில அமைப்புக்கள் தேடிவருகின்றன என்று போகொல்லாகம கூறியுள்ளார்
www.athirvu.com
Monday, March 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment