கருணாவிற்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத கறுப்பு நிற வாகனம் சமீபத்தில் விபத்தில் சிக்கியது யாவரும் அறிந்ததே. அதை ஒருவாறு திருத்தி அதில் பயணம் செய்துவந்த கருணாவிற்கு மேலும் ஒரு சோதனை வந்துள்ளது. அவர் வாகனத்தை இலங்கை அரசு மீளப்பெற்றுவிட்டதாகவும், அவர் தற்போது சாதாரண வாகனத்திலேயே பயணம் மேற்கொள்வதாகவும் கொழும்பில் விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கருணாவிற்கு வழங்கப்ப்பட்ட பாதுகாப்பிலும் இலங்கை கைவைத்துள்ளதா என அறியமுடியவில்லை.
இதனையடுத்து தனது ஆயுதக் குழுவில் விசுவாசமாக உள்ள நபர்களை மட்டும் இணைத்து தனது பாதுகாப்பை தாமே மேற்கொண்டு வருவதாக கருணாவுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அதிர்வு இணையத்திற்கு செய்திகள் கசிந்துள்ளது. வழமையாக கருணா சென்றுவரும் குண்டு துளைக்காத பஜோரோ வாகனத்திற்குப் பதிலாக, ஜப்பான் தயாரிப்பான வாகனம் ஒன்றையே இவர் பயன்படுத்தி வருகிறார். அது பாதுகாப்பற்றது என்ற காரணத்தால் அவர் அடிக்கடி வெளியே செல்வதை தவிர்த்து வருவதாகவும் மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருணாவிடம் இருந்து பெறப்பட்ட வாகனத்தை முக்கிய வி.ஜ.பி ஒருவரின் தேர்தல் பிரச்சாரங்களை கவனிக்கும் நபருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் இவர் வெளியே வரக்க்கூடாது என்பதே இலங்கை அரசின் நோக்கமாக
http://www.athirvu.com/
Tuesday, March 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment