பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோருவதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தது ஒரு தடையாகாது என பிரித்தானியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப்புலிகள் அமைப்பில் 1992 ம் ஆண்டு இணைந்து கொண்ட நபர் ஒருவர் அந்த அமைப்பில் பல பதவி நிலைகளை வகித்திருந்தார். விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினரை வன்னியில் இருந்து காடுகள் ஊடாக கொழும்புக்கு நகர்த்தும் நகர்வுப் பிரிவிலும் அவர் அங்கம் வகித்திருந்தார்.
அத்துடன், விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவின் கட்டளை தளபதி பொட்டம்மானின் பாதுகாவலராகவும், புலனாய்வுப் பிரிவின் தாக்குதல் அணியின் இரண்டாம் நிலை தளபதியாகவும் பணியாற்றியிருந்தார்.
அவர் கடந்த 2006ம் ஆண்டு கொழும்பு பிரதேசத்துக்கு புலனாய்வுக்கான அனுப்பப்ட்ட போது, அவரது நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் கண்காணிக்க ஆரம்பித்த நிலையில், அவர் பிரித்தானியாவுக்கு தப்பி சென்றுள்ளார்.
அங்கு, தாம் இலங்கைக்கு திரும்பும் பட்சத்தில், தாம் ஒரு தமிழன் என்ற அடிப்படையிலும், விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்ற அடிப்படையிலும் அரசாங்கத்தினால் துன்புறுத்தப்படலாம் என கூறி, அவர் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரி இருந்தார்.
அவரது மனுவினை ஏற்றுக்கொண்ட பிரித்தானிய உயர் நீதிமன்றம், அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் உறுப்பினராக இருப்பினும், அவர் அரசியல் தஞ்சம் கோர உரித்துடையவர் என தெரிவித்தது. எனினும் அவருக்கான அரசியல் தஞ்சம் வழங்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அவர் இலங்கையில் இடம்பெற்ற பாரிய யுத்தத்தில் பங்கு கொண்டுள்ள நிலையில், யுத்த குற்றங்களிலும் பங்குடையவராகிறார். எனவே அவருக்கு அரசியல் தஞசம் வழங்க முடியாது என அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தநிலையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றத்தில் அவரது பங்கு குறித்த விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment