Tuesday, March 2, 2010

முன்னாள் போராளிகளை விடுவிக்கவும் முடியாது! பராமரிக்க நிதியும் போதாது! என்கிறது சிறீலங்கா அரசு

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை பல நாட்டு உதவியுடன் அழித்து, கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள போராளிகளை பராமரிக்க தம்மிடம் இருக்கும் நிதி போதாது என சிறீலற்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதானத்த றணசிங்க தெரிவித்துள்ளார்.

தாம் இவர்களுக்கு உதவியளிக்க மாத்திரம் மாதம் 88 மில்லியன் ரூபாய்களை செலவழிப்பதாக தெரிவித்துள்ள அவர் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் புலம் பெயர் தமிழர்களும் அவர்களுக்கான புனர்வாழ்வு மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்க உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை விடுவிக்க தமக்கு மேலும் கால அவகாசம் தேவை என்றும் அவர்களிடம் புரையோடிப்போயுள்ள போராட்ட குணத்தை மாற்றி அமைக்க இன்னும் காலம் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

தாம் தடுத்து வைத்துள்ள 10,000 க்கு மேற்பட்டவர்களில் குறிப்பிட்ட தொகையானவர்கள் சிறிய கால எல்லையில் தான் விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்றும் ஆனால் நீண்ட கால உறுப்பினர்களையும் அவர்களின் மன நிலையையும் மாற்ற இன்னும் கால தாமதம் தேவை என்பதால் அவர்களை விடுவிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

 
Source : http://www.pathivu.com/

No comments:

Post a Comment